உள்ளடக்கம்
பத்திரிக்கையாளர் சந்திப்பு (அக்டோபர் 19, 2018 – சென்னை)
நிருபர்: “மீ டூ” விவகாரம் மிக பெரிய பிரச்சினையாக இந்தியா முழுதும் இருக்கிறது. திரையுலகில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ரஜினி: “மீ டூ” பெண்களுக்கு சாதகமான இயக்கம். ஆனால் அதை தவறாக பயன்படுத்தக்கூடாது. அதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.
நிருபர்: கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?
ரஜினி: ஆமாம், அதனை வைரமுத்து மறுத்திருக்கிறாரே. “அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. அதற்கான ஆதாரம் இருக்கிறது. வழக்கு கூட போடுவேன்” என்று (வைரமுத்து) சொல்லியிருக்கிறாரே.
நிருபர்: “மீ டூ” இயக்கத்தை ரஜினிகாந்த் ஆதரிக்கிறாரா?
ரஜினி: “மீ டூ” பெண்களுக்கு உபயோகமான இயக்கம். சரியாக பயன்படுத்துவதில்தான் (அதன் பயன்) இருக்கிறது.
காணொளி: https://youtu.be/6xRvxgtN6wc (மணித்துளி 1:12 முதல் 1:51 வரை)
இந்தியா டுடே “ரஜினிகாந்த் சிறப்பிதழ்” பேட்டி (டிசம்பர் 2018)
கேள்வி: திரைத்துறைக்குள் மீ டூ இயக்கம் பற்றி உங்கள் கருத்து என்ன?
ரஜினி: மிக நல்ல இயக்கம். ஆனால் அதை தவறாக பயன்படுத்தக்கூடாது.
