இங்கே மாற்று அரசியலுக்கான குரல் வலுப்பட வேண்டுமென்றால், முதலில் திமுக அதிமுக கூட்டணிகள் தவிர்த்த ஒரு கட்சி/கூட்டணியிலிருந்து கணிசமான உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு நுழைய வேண்டும். 2006ல் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வந்த விஜயகாந்த் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும், மாற்றத்தை விதைக்க முடியாமல் போனதற்கு காரணம் அவர் ஒருவர் மட்டுமே வென்று சட்டமன்றம் போனதனால்தான். இந்த 2021 தேர்தலிலும் அதே நிலை வந்தால், அதன்பின் மாற்று அரசியலுக்கான குரலையே நசுக்கிவிடுவார்கள்.
என் விருப்பம் – இது பேராசை என்று கூட பலர் சொல்லலாம் – என்னவென்றால், மக்கள் நீதி மய்ய கூட்டணி 2021 தேர்தலில் குறைந்தபட்சம் 60 தொகுதிகளாவது வென்று சட்டமன்றத்தில் நுழைய வேண்டும். நான் சொல்வதைக் கேட்டு பலர் சிரிக்கலாம், சிலர் “இதெல்லாம் சாத்தியமா” என்று நம்பிக்கை இல்லாமல் கேட்கலாம், சிலர் “வாய்ப்பே இல்லை” என்று அடித்து பேசலாம். ஆனால், நான் என் சக வாக்காளர்களைக் கேட்பது இதுதான் – “நாம் மனசு வைத்து ஓட்டு போட்டால் முடியாதா? ஒரு 60 தொகுதிகளை குறிவைத்து, அந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் ‘நிச்சயமாக மக்கள் நீதி மய்ய கூட்டணிக்கே ஓட்டு போடுவோம்’ என்று உறுதி எடுத்து நம்மால் செயல்பட முடியாதா? செய்வோமே, செஞ்சுதான் பார்ப்போமே”.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்கு சதவிகித அடிப்படையில் நான் 60 (வாய்ப்பு தரக்கூடிய) தொகுதிகளை இங்கே பட்டியலிடுகிறேன். இந்த 60 தொகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் திமுக, அதிமுகவை ஒதுக்கிவிட்டு மக்கள் நீதி மய்ய கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவோம். 54 வருடங்களுக்கு பிறகு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை நிகழ்வதற்கான கருவியாக இருப்போம். கொஞ்சம் மனசு வையுங்க.
| சட்டமன்ற தொகுதி | வேட்பாளர் | சின்னம் |
|---|---|---|
| கோவை (தெற்கு) | கமல் ஹாசன் | டார்ச் லைட் |
| சிங்கா நல்லூர் | மகேந்திரன் | டார்ச் லைட் |
| கோவை (வடக்கு) | தங்கவேலு | டார்ச் லைட் |
| கவுண்டம் பாளையம் | சுரபி பங்கஜ் ராஜ் | டார்ச் லைட் |
| சூலூர் | ரங்கநாதன் | டார்ச் லைட் |
| பல்லடம் | மயில்சாமி | டார்ச் லைட் |
| தி.நகர் | பழ. கருப்பையா | டார்ச் லைட் |
| விருகம் பாக்கம் | சினேகன் | டார்ச் லைட் |
| வேளச்சேரி | சந்தோஷ் பாபு | டார்ச் லைட் |
| மயிலாப்பூர் | ஸ்ரீப்ரியா | டார்ச் லைட் |
| சைதாப் பேட்டை | சினேகா மோகன்தாஸ் | டார்ச் லைட் |
| சோழிங்க நல்லூர் | ராஜீவ் | டார்ச் லைட் |
| வில்லி வாக்கம் | ஸ்ரீஹரன் பாலா | டார்ச் லைட் |
| அண்ணா நகர் | பொன்ராஜ் | டார்ச் லைட் |
| ஆயிரம் விளக்கு | கே எம் ஷெரிப் | டார்ச் லைட் |
| சேப்பாக்கம் – திருவில்லிக் கேணி | முஹமது இத்ரிஸ் | |
| எழும்பூர் | பிரிய தர்ஷினி | டார்ச் லைட் |
| துறைமுகம் | கிச்சா ரமேஷ் | |
| கொளத்தூர் | ஜெகதீஷ் | டார்ச் லைட் |
| ராயபுரம் | குணசேகரன் | டார்ச் லைட் |
| பெரம்பூர் | பொன்னு சாமி | டார்ச் லைட் |
| திரு வி.க. நகர் | டார்ச் லைட் | |
| திரு வொற்றியூர் | எஸ் டி மோகன் | டார்ச் லைட் |
| டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் | பாசில் | டார்ச் லைட் |
| அம்பத்தூர் | வைதீஸ்வரன் | டார்ச் லைட் |
| மதுரவாயல் | பத்மப்ரியா | டார்ச் லைட் |
| ஆலந்தூர் | சரத் பாபு | டார்ச் லைட் |
| தாம்பரம் | சிவா இளங்கோ | டார்ச் லைட் |
| பல்லாவரம் | செந்தில் ஆறுமுகம் | டார்ச் லைட் |
| திருப்பரங் குன்றம் | பரணி ராஜன் | டார்ச் லைட் |
| மதுரை கிழக்கு | முத்து கிருஷ்ணன் | டார்ச் லைட் |
| மதுரை தெற்கு | ஈஸ்வரன் | |
| மதுரை மத்தி | மணி | டார்ச் லைட் |
| மதுரை மேற்கு | முனியசாமி | டார்ச் லைட் |
| மதுரை வடக்கு | அழகர் | டார்ச் லைட் |
| திருப்பூர் வடக்கு | சிவபாலன் | டார்ச் லைட் |
| திருப்பூர் தெற்கு | அனுசுயா ரவி | டார்ச் லைட் |
| ஆவடி | உதயகுமார் | டார்ச் லைட் |
| மாதவரம் | ரமேஷ் கொண்டல சாமி | டார்ச் லைட் |
| தொண்டா முத்தூர் | ஸ்ரீநிதி | டார்ச் லைட் |
| கிணத்துக் கடவு | சிவா | டார்ச் லைட் |
| பொள்ளாச்சி | சதீஷ் குமார் | டார்ச் லைட் |
| சேலம் தெற்கு | மணி கண்டன் | டார்ச் லைட் |
| சேலம் வடக்கு | குரு சக்கரவர்த்தி | டார்ச் லைட் |
| சேலம் மேற்கு | தியாக ராஜன் | டார்ச் லைட் |
| ஈரோடு கிழக்கு | ராஜ்குமார் | டார்ச் லைட் |
| குமார பாளையம் | காமராஜ் | டார்ச் லைட் |
| ஈரோடு மேற்கு | துரை சேவுகன் | டார்ச் லைட் |
| மேட்டுப் பாளையம் | லக்ஷ்மி | டார்ச் லைட் |
| அவினாசி | வெங்கடே ஸ்வரன் | டார்ச் லைட் |
| திண்டுக்கல் | ராஜேந்திரன் | டார்ச் லைட் |
| திருச்சி மேற்கு | டார்ச் லைட் | |
| திருச்சி கிழக்கு | வீரசக்தி | டார்ச் லைட் |
| விருதுநகர் | மணி மாறன் | |
| சிவகாசி | டார்ச் லைட் | |
| தூத்துக்குடி | சுந்தர் | |
| அருப்புக் கோட்டை | உமாதேவி | டார்ச் லைட் |
| பாளையங் கோட்டை | பிரேம்நாத் | டார்ச் லைட் |
| தஞ்சாவூர் | சுந்தர மோகன் | டார்ச் லைட் |
| கடலூர் | ஆனந்த ராஜ் |
