அலசல்வரலாறு

பெண் கல்வி: திராவிட அரசியலுக்கு முன்பே…

1910ல் விருதுநகரில் 1ம், 2ம் வகுப்பு நடத்தும் நோக்கில் பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை திருவாலவாய நாடார் என்பவர் தொடங்கி இருக்கிறார். வீடு வீடாகப் போய் பெற்றோரிடம் கெஞ்சி பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவந்து படிக்க வைத்திருக்கிறார். 1916லேயே 5ம் வகுப்பு வரை, பின்னர் 1922ல் 7ம் வகுப்பு வரை என வளர்ந்த பள்ளி, “க்ஷத்ரிய பெண்கள் பள்ளி” என்ற பெயரால் அழைக்கப்பட்டு, இன்று 110+ வருடங்களைக் கடந்து நிற்கிறது. இங்கே காமராஜரின் தங்கை நாகம்மாளும் சில வருடங்கள் படித்ததாகக் கூறப்படுகிறது.

திருவாலவாய நாடார் சிலை

சரி, இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? பொதுவாகவே தமிழ்நாட்டில் பெண் கல்வி, பெண்ணுரிமை இது பற்றியெல்லாம் நீதிக்கட்சியும் பெரியாரும் மட்டுமே பேசியது போல் திராவிட ஆதரவாளர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நீதிக்கட்சியும் பெரியாரும் பேசுவதற்கு முன்பே பாரதியார் பேசினார் என்பது ஒருபுறம்.

பெண் கல்விக்கு தன்னை அர்ப்பணித்த திருவாலவாய நாடார் பற்றிய குறிப்பு

மறுபுறம் – 1913ல்தான் திராவிட சங்கம் உருவானது. பின்னர் 1916ல்தான் அது நீதிக்கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அதற்கெல்லாம் முன்பே 1910ல் இப்படி ஒரு பெண்கள் பள்ளி உருவாகி இருக்கிறது என்ற தகவல் தெரிந்தால், “திராவிட மாடல்” மயக்கத்திலிருந்து சிலர் சற்றே தெளிய வாய்ப்பிருக்கிறது என்பதற்கே இந்தப் பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!