அரசியல் பாணி

Home ரஜினி வாய்ஸ் 2.0 பொது அரசியல் பாணி

ரஜினியின் அரசியல் பாணி எப்படி இருக்கும்? இதுவரை அவர் கோடிட்டு காட்டியிருக்கும் அம்சங்கள் இங்கே.

“திட்டுப்புடி அரசியல் வேண்டாம்” (மார்ச் 5, 2018 – சென்னை, எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா)

“எனக்கும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டிய கடமை இருக்கிறது. அதனால்தான் அரசியலுக்கு நான் வருகிறேன் என்று சொன்னேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னவுடன், நீங்கள் (அரசியல் தலைவர்கள்) இரத்தின கம்பளி போட்டு வரவேற்று வாழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் வாழ்த்துக்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? ஏன் ஊக்கம் கெடுக்கிறீர்கள்? அரசியல் பூப்பாதை இல்லை; முட்கள், பாம்புகள், கற்கள் இருக்கிற பாதை என்று உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். எனக்கு தெரிந்திருந்தும், இந்த வயதில் எனக்கு எல்லாம் இருந்தும், மக்களுக்கு நல்லது செய்ய நான் அரசியலுக்கு வந்தால் நீங்கள் ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்த திட்டுப்புடி அரசியல் (ஒருவரை ஒருவர் திட்டி கொள்ளும் அரசியல்) வேண்டாம். போதும், நிறுத்திக் கொள்ளலாம்.”

காணொளி: https://youtu.be/Vtyyz_WEwEs (மணித்துளி 8:57 முதல் 10:03 வரை)


“பேச்சு அரசியல் போதும்(ஏப்ரல் 7, 2018 – சென்னை)

“நிறைய பேசினால் நிறைய எதிரிகள் உருவாகுவார்கள். (நான்) நிறைய பேசி நிறைய எதிரிகள் சம்பாதிக்க விரும்பும் ஆளல்ல. இன்னொன்று – நிறைய பேசி பேசியே அரசியல் செய்துவிட்டார்கள். இந்த பேச்சு அரசியல் போதும்.”

காணொளி: https://youtu.be/mWufp-lOW8o (மணித்துளி 7:58 முதல் 8:18 வரை)


சிம்ம பார்வை அரசியல் (மே 30, 2018 – சென்னை)

“இந்த (பழி போடும்) அரசியல் – அவர்கள் (திமுக) மீது இவர்கள் (அதிமுக) பழி போடுவது, இவர்கள் (அதிமுக) மீது அவர்கள் (திமுக) பழி போடுவது என்பது – சரியல்ல. “சிம்ம பார்வை” என்று சொல்வார்கள். அதாவது, சிங்கம் அவ்வப்பொழுது பின்னால் திரும்பி பார்க்கும். அது போல், அவ்வப்பொழுது திரும்பி (கடந்த காலத்தை) பார்க்க வேண்டுமேயன்றி எப்பொழுதும் பின்னாலேயே பார்த்து கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது. எப்பொழுதும் கடந்த காலத்தில் இது நடந்தது, அது நடந்தது என அரசியல் செய்து கொண்டிருந்தால் அது மிகவும் கஷ்டம் தரும். அந்த அரசியல் மாற வேண்டும்.”

காணொளி: https://youtu.be/29pRLla6Ycw (மணித்துளி 0:49 முதல் 1:16 வரை)


புதிய, வித்தியாசமான அரசியல்  (டிசம்பர் 2018 – இந்தியா டுடே “ரஜினிகாந்த் சிறப்பிதழ்” பேட்டி)

“நான் அரசியலில் நுழைந்தால் நான் நானாக இருப்பேன். வித்தியாசமான அரசியலை உருவாக்குவேன். இல்லையென்றால் ரஜினிகாந்த் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? புதிய, வித்தியாசமான அரசியலை அறிமுகப்படுத்துவேன். இல்லையெனில் 67 வயதில் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? இது பூக்களின் பாதை அல்ல. இருப்பினும் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.”


 

error: Content Copyrights Reserved !!