பாரதிய ஜனதா கட்சி

Home ரஜினி வாய்ஸ் 2.0 பிற கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி

“என் பின்னால் பாரதிய ஜனதாவா?”  (மார்ச் 20, 2018 – சென்னை)

நிருபர்: நீங்கள் இமாச்சல பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை சந்தித்ததாக ஒரு சர்ச்சை ஆகியிருக்கிறது. அதற்கு உங்கள் பதில் என்ன?
ரஜினி: முதலிலிருந்தே என் பின்னால் பாரதிய ஜனதா இருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். என் பின்னால் இருப்பது ஒருவர் மட்டுமே – கடவுள். அதன் பிறகு, மக்கள்.

காணொளி: https://youtu.be/DK2-T8Hwpac (மணித்துளி 0:08 முதல் 0:19 வரை)


காவிரி விவகாரமும் மோடி அரசும்  (ஏப்ரல் 7, 2018 – சென்னை)

நிருபர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் (பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான) மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா?
ரஜினி: துரோகம் இழைத்துவிட்டதாக நினைக்கவில்லை. ஆனால், (வாரியம் அமைக்காமல்) தாமதித்து கொண்டிருக்கிறார்கள். அதனை துரிதப்படுத்த வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். [காணொளி: https://youtu.be/mWufp-lOW8o (மணித்துளி 5:36 முதல் 5:47 வரை)]

நிருபர்: கர்நாடக தேர்தலை மனதில் வைத்துதான் இப்படி (காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்) மத்திய அரசு செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதுதான் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ரஜினி: (சிரிப்புடன்) இது எல்லாம் அரசியல், அதற்குள் போவதற்கு இப்பொழுது நான் விரும்பவில்லை. எல்லாமே அரசியல்தான். [காணொளி: https://youtu.be/mWufp-lOW8o (மணித்துளி 5:51 முதல் 6:02 வரை)]

நிருபர்: (காவிரி விவகாரத்தில்) பிரதமர் மோடிக்கு உங்கள் செய்தி என்ன?
ரஜினி: காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அதற்கான வேலைகளை அவர் (மோடி) துரிதப்படுத்த வேண்டும். [காணொளி: https://youtu.be/mWufp-lOW8o (மணித்துளி 6:14 முதல் 6:23 வரை)]


பா.ஜ.க ஆபத்தான கட்சியா? மோடி பலசாலியா? (நவம்பர் 12, 2018 – சென்னை)

“அனைத்து கட்சிகளும் பா.ஜ.கவை தோற்கடிக்க ஒன்றாக சேர்ந்திருக்கிறார்களே. அப்படியென்றால் பா.ஜ.க ஆபத்தான கட்சியா? என்று (நேற்று நிருபர்கள்) என்னிடம் கேட்டனர். அதற்கு என்னுடைய பதில் “எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் பா.ஜ.க அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே?” என்பதே. மற்றபடி, பா.ஜ.க ஆபத்தான கட்சியா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

ஊடகங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் – இப்பொழுதெல்லாம், அனைத்தும் (அனைத்து பேட்டிகளும்) வீடியோ எடுக்கப்படுகின்றன. அனைத்தும் பதிவாகிறது. சொல்வதை நீங்கள் திரித்து எழுதினால் தெரிந்துவிடும். அது நன்றாக இருக்காது. எனவே கவனமாக (செய்திகளை) வெளியிடவும்.”

இவ்வாறு ரஜினி பேசிய பிறகு நிருபர்களின் கேள்விகளும், அவர் பதில்களும் –

நிருபர்: உங்கள் கருத்து தவறாக திரிக்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?
ரஜினி: ஆமாம், நீங்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

நிருபர்: நேற்று கேள்வி எழுப்பும்போது (பா.ஜ.க) ஆபத்தான கட்சியா என்று கேள்வி வைத்திருந்தார்கள். நீங்கள் சொல்லியிருந்த பதிலில் “அவர்கள் (எதிர்க்கட்சிகள்) அப்படி நினைத்தால் அப்படியாக இருக்கலாம்” என்று சொன்னீர்கள். அது அந்த கேள்விக்கான பதில்தானே?
ரஜினி: இப்பொழுதும் அதேதான் சொல்கிறேன் – “எதிர்க்கட்சிகள் (பா.ஜ.க) ஆபத்தான கட்சி என்று நினைத்தால் அவர்களை பொறுத்தவரை ஆபத்தான கட்சிதான் அது. மக்களுக்கு ஆபத்தா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். புரிந்ததா?

நிருபர்: பா.ஜ.க ஆபத்தான கட்சியா இல்லையா என்பது பற்றி ரஜினிகாந்தின் கருத்து என்ன?
ரஜினி: அதனை நான் இப்பொழுது சொல்ல முடியாது. மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். என் கருத்தை இப்பொழுது சொல்ல முடியாது, ஏனென்றால் நான் இன்னும் முழுதாக அரசியலில் இறங்கவில்லை. முழுதாக அரசியலில் இறங்கிய பிறகு அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு கருத்து சொல்கிறேன் என்று ஏற்கனவே பலமுறை தெளிவாக சொல்லியிருக்கிறேன்.

நிருபர்: எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கும் பெரிய கூட்டணி பற்றி உங்கள் கருத்து?
ரஜினி: பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்து யுத்தத்திற்கு போனால் யார் பலசாலி? அந்த பத்து பேரா, இல்லை பத்து பேர் எதிர்க்கும் அந்த ஒருத்தனா? யார் பலசாலி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நிருபர்: நீங்கள் சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பீர்களா?
ரஜினி: அதை (கூட்டணியை) அப்போது (தேர்தல் சமயம்) பார்த்து கொள்ளலாம்.

நிருபர்கள்: பத்து பேர் சேர்ந்து எதிர்க்கும் போது அந்த பத்து பேர் பலசாலி என்று எடுத்துக்கொள்ளலாமே?
ரஜினி: அப்படியென்றால் பத்து பலசாலிகள் ஒரு பலசாலியை எதிர்த்து போரிட போனால் அவன் எவ்வளவு பெரிய பலசாலி?!

நிருபர்: அப்படியென்றால் மோடி மிகப்பெரிய பலசாலி என்கிறீர்களா?
ரஜினி: 2019ல் தெரிந்துவிடும்.

காணொளி: https://youtu.be/9xgHe_eLcnA (மணித்துளி 1:48 முதல் 5:16 வரை)


ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.கவின் தோல்வி (டிசம்பர் 11, 2018 – சென்னை)

நிருபர்: பா.ஜ.க 5 மாநிலங்களின் (சட்டமன்ற) தேர்தல்களில் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறது. இது பற்றி?
ரஜினி: இது பாஜக செல்வாக்கை இழந்திருப்பதை நன்றாக காட்டுகிறது.

நிருபர்: மோடி ஒரு வலிமையான தலைவர் என்று ஏற்கனவே பேசி இருந்தீர்கள். அவர் (மோடி) 5 மாநிலங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டும் இந்த தோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.
ரஜினி: நிச்சயமாக பா.ஜ.க வுக்கு இது ஒரு பின்னடைவுதான். அதில் சந்தேகமே இல்லை.

காணொளி: https://youtu.be/2XwPbX8AeIo (மணித்துளி 0:14 முதல் 0:32 வரை)


 

error: Content Copyrights Reserved !!