மக்கள் நீதி மய்யம்

Home ரஜினி வாய்ஸ் 2.0 பிற கட்சிகள் மக்கள் நீதி மய்யம்

“மக்கள் நீதி மய்யம்” கட்சி துவக்கம் பற்றி… (பிப்ரவரி 23, 2018 – சென்னை)

எல்லாரும் வெவ்வேறு பாதைகளில் போனாலும் போய் சேரும் இடம் ஒன்றுதான் – மக்கள் நலன்தான்.

மக்கள் நீதி மய்யம் நன்றாக இயங்கும் என நம்புகிறேன். கமல் நல்ல திறமைசாலி. அவர் மக்கள் நம்பிக்கையை சம்பாதிப்பார் என உறுதியாக நம்புகிறேன்.

காணொளி: https://youtu.be/pZIMNpzqmcs (மணித்துளி 2:01 முதல் 2:22 வரை)


கமலின் ஆன்மீக அரசியல் எதிர்ப்பு குறித்து… (ஏப்ரல் 7, 2018 – சென்னை)

நிருபர்: ரஜினி ஆன்மிக அரசியலை முன்னிலைப்படுத்தினால் அதை நான் எதிர்ப்பேன் என்று நடிகர் கமல் சொல்லியிருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன?
ரஜினி: நான் அவரை (கமலை) எதிர்க்கமாட்டேன். அவர் எனக்கு எதிரியே கிடையாது. ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகளின் கண்ணீர், மீனவர்களின் கண்ணீர், இலங்கை அகதிகள் (நாடற்ற) அவல நிலை – இவைகள்தான் என்னுடைய எதிரிகள்.

காணொளி: https://youtu.be/mWufp-lOW8o (மணித்துளி 7:15 முதல் 7:52 வரை)


2019 தேர்தல் போட்டிக்கு வாழ்த்து (பிப்ரவரி 24, 2019 – ட்விட்டர்)

“கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…”


2019 தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு குறித்து… (ஏப்ரல் 9, 2019 – சென்னை)

என்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு மேல் இதுபற்றி நான் ஏதும் பேச விரும்பவில்லை. ஊடகங்கள் இதை பெரிதுபடுத்தி நட்பை கெடுத்துவிட வேண்டாம்.

மேலே சொல்லியிருக்கும் “அரசியல் நிலைப்பாடு” என்பது, ரஜினி பிப்ரவரி 17, 2019 அன்று தெரிவித்த “2019 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை” என்பதாகும்.

காணொளி: https://youtu.be/0WKShf0XOwY (மணித்துளி 0:24 முதல் 1:03 வரை)


கமலின் “கோட்ஸே” பேச்சு குறித்து… (மே 13, 2019 – சென்னை)

நிருபர்: “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான்” என்று கமல் சொன்னது சர்ச்சையாகி இருக்கிறதே?
ரஜினி: நான் கருத்து கூற விரும்பவில்லை.

காணொளி: https://youtu.be/t0sdV6APFsM (மணித்துளி 0:32 முதல் 0:37 வரை)


 

error: Content Copyrights Reserved !!