“ஏன் மாற்று அரசியல் தேவை, ஏன் ரஜினியின் ஆன்மிக அரசியலை ஆதரிக்க வேண்டும்” என வலைப்பதிவுகள், வீடியோக்கள் அவ்வப்பொழுது வெளியிட்டு வருகிறேன். அதன் ஒரு அங்கமாக, “திமுகவிற்கு ஏன் வாக்களிக்கக்கூடாது?” என திமுகவின் அரசியல் தவறுகள், அரசு நிர்வாக குளறுபடிகள், சித்தாந்த சறுக்கல்கள் குறித்தும் ஆக்கபூர்வமாக பேசி வருகிறேன். இந்த தர்க்க ரீதியிலான அறிவுப்பூர்வமான காரணங்கள் தாண்டி, என்னை போன்ற லட்சக்கணக்கான ரஜினி அபிமானிகளின் “திமுக எதிர்ப்பு”க்கு உணர்வுபூர்வமான காரணம் குறித்த பதிவு இது.
தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் இங்கே எல்லோருக்கும் நல்ல மனிதராகத்தான் தெரிந்தார் – அவர் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று டிசம்பர் 2017ல் அறிவிக்கும் வரை. அந்த அறிவிப்புக்குப் பின், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ரஜினி மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கினர். சில சாம்பிள்கள் இங்கே –
- திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, திமுகவின் CAA போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் சமயம் “போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்” என ரஜினியை மறைமுகமாக சுட்டி வம்பிழுத்தார். அவருடைய தாத்தா கலைஞருடன் அமர்ந்து 25 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் பேசியவர் ரஜினி. எளிதாக கிடைத்துவிட்ட திமுகவின் “பட்டத்து இளவரசர்” நிலை, அரசியல் கத்துக்குட்டியான உதயநிதியை இப்படி ஆணவமாக பேச வைக்கிறது.
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோது ரஜினி அதை ஆதரித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்தை வெளியிட்ட திமுகவின் (மதுரை) எம்எல்ஏ, “அரசியல் பாரம்பரியம்” மிக்க பி.டி.ஆர்.தியாகராஜன் ரஜினியை “தார்மீகம் தொலைத்தவர், அறிவற்றவர்” (morallay bankrupt, intellectually challenged) என்று சொன்னார்.
- சமீபத்தில் ரஜினியின் கார் டிரைவருக்கு ரூ.100/- அபராதம் விதிக்கப்பட்டு நிலுவையில் இருந்தபோது, திமுகவின் (தருமபுரி) எம்பி செந்தில்குமார் “அந்த 100 ருபாய் கட்ட நான் உதவுகிறேன்” என்று தரம் குறைந்த முறையில் ட்வீட் பதிவிட்டார். (இந்த பதிவின் எதிரொலியாக – வரி குறைப்புக்காக தமிழ்நாட்டிற்கு வரி வருமானம் வராத வகையில், செந்தில்குமார் தன் விலையுயர்ந்த காரை பாண்டிச்சேரியில் பதிவு செய்ததை ரஜினி ரசிகர்கள் வெளிச்சமிட்டதும், ட்விட்டரில் “#வரிஏய்ப்பு_எம்பிசெந்தில்குமார்” என ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஓட்டியதும் தனிக்கதை).
- பெரும்பாலான ஊடகவியலாளர்கள் திமுக சார்பானவர்கள். ரஜினியை பற்றி எந்த செய்தி வந்தாலும் அதை எப்படி திரித்து அவர் மீது ஒரு நெகடிவ் சாயம் பூசமுடியும் என அலைபவர்கள். ஒட்டு மொத்த இந்திய அளவில் வருமான வரித்துறை வாபஸ் வாங்கிய வழக்குகளில் ஒன்றுதான் ரஜினி மீது இருந்த வழக்கும் (அதுவும் ரஜினி வென்ற ஒரு தீர்ப்பில் திருப்தி அடையாமல் வருமானவரித்துறை செய்த அப்பீல் வழக்கு). ஆனால், ரஜினி ஏதோ வரி ஏய்ப்பு செய்தவர் போல் சித்தரித்து திமுக சார்பு மீடியாக்காரர்கள் சந்தோஷம் கொண்டனர்.
- இதோ மிக சமீபத்தில் மாநகராட்சி தன் விதிமுறைகளை மீறி, கொரோனா ஊரடங்கு சமயத்தில் கல்யாண மண்டபத்திற்கு விதித்த வரி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரஜினி. நியாயமான வழிமுறையில் சென்றால் கூட, “ரஜினி வரி கட்ட மறுக்கிறார்” என வாய்கூசாமல் பொய் பரப்புகிறார்கள் திமுகவும், திமுக சார்பு மீடியாவும்.
மேற்சொன்னவர்களே இப்படி என்றால், இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள திமுகவின் இணைய ஆதரவாளர்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ, அவரது பொது வாழ்வு நடவடிக்கைகள் குறித்தோ இவர்கள் விமர்சனம் வைத்தால், அவற்றுக்கு தகுந்த தரவுகளோடு பதிலும், ஆக்கபூர்வமான பதிலடியும் தர நாங்கள் (ரஜினி அபிமானிகள்) என்றுமே தயார் நிலையில் உள்ளோம். ஆனால், நான் மேலே சொன்னவை விமர்சனங்கள் அல்ல. அவை “Character assasination” எனப்படும் தனிமனித நற்பண்புகளை சிதைத்து, உருமாற்றி பொதுவெளியில் அவதூறாக பரப்பும் செயல்கள். இதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
இங்கே பலருக்கு ரஜினியை ஒரு சூப்பர்ஸ்டார் நடிகராக பிடிப்பதை விட, நேர்மையான + சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்ட + மனதில் பட்டதை பேசுகின்ற நல்ல மனிதராகத்தான் அதிகம் பிடிக்கும். அப்படி எங்கள் இதயங்களில் ஊன்றி பிரம்மாண்டமாய் நிற்பவர் ரஜினி. திமுக என்ற பெரிய கட்சியில் இருப்பதாலோ (அல்லது அது சார்பாக மீடியாவில் நிற்பதாலோ) பல சில்வண்டுகள் இப்படி அவதூறு பரப்புவதை ரஜினி சிரித்துக்கொண்டே கடந்து போவார். ஆனால், ரஜினியின் நிஜமான குணத்திற்கு முற்றிலும் மாறாக “பொய்யர்”, “வரி ஏய்ப்பவர்”, “ஏமாற்றுக்காரர்” என அவரைப் பற்றி அவதூறு செய்யும் திமுகவை நாங்கள் (ரஜினி அபிமானிகள்) ஏன் கடந்து போக வேண்டும்? “குலசாமி”, “தலைவர்”, “ஆதர்ச நாயகர்”, “மானசீக குரு” என பல ரூபங்களில் எங்களுள் கலந்தவரைப் பற்றி சற்றும் மனசாட்சி இல்லாமல், முழுக்க முழுக்க வன்மத்தோடு பொய் பரப்பும் திமுகவை “இது வெறும் அரசியலுக்காக” என நாங்கள் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்?
பதிலடி கொடுப்போம். சாதாரணமாக அல்ல, எங்கள் ஆழ்மனதில் வேர்பிடித்துவிட்ட வெஞ்சினத்தோடு இனி ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக ரீதியில் திமுகவிற்கு பதிலடி கொடுப்போம். இதுவரை “ரஜினி ரசிகர்கள்/அபிமானிகள்” என்பது ஒரு ஒருங்கிணைந்த ஓட்டு வங்கி அல்ல. எங்கள் ஓட்டுகள் பல கட்சிகளுக்கும் பிரிந்து சென்றன. ஆனால், இனி அது ஒரு தனி ஓட்டு வங்கி என்பதை அடுத்த தேர்தல் முடிவுகள் காட்டும். அத்தகைய சக்தி வாய்ந்த ஓட்டு வங்கி, “ரஜினி என்னும் நல்ல மனிதரின் characterஐ assasinate செய்த/செய்யும் திமுகவிற்கு இனி எந்த தேர்தலிலும் ஓட்டு போடாது” என்றொரு புள்ளியில் நிற்கிறது. ஆம், ஒரு anti-DMK ஓட்டு வங்கியாக எங்களை திமுக உருவெடுக்க வைக்கிறது.
2016ல் 1% வாக்கு வித்தியாசத்தில் நூலிழையில் ஆட்சியை பெறமுடியாமல் போன திமுகவிற்கு, இனி ஒவ்வொரு தேர்தலிலும் இந்த “ரஜினி ரசிகர்கள்/அபிமானிகள்” ஓட்டு வங்கியின் வீரியம் புரியும். “எம்ஜிஆர் காலத்து அரசியலில் பெற்ற பாடத்தை மறந்து, இப்படி ஒரு பகை வளர்த்தோமே” என திமுக அனுதினமும் வருந்திக் கிடக்கும் காலம் தூரத்தில் இல்லை. ரஜினி அபிமானிகள் ஒரு தலைமுறையோடு முடிந்து போகிறவர்கள் அல்ல. திமுக இன்று விதைப்பதற்கு இன்னும் பல தேர்தல்களில் அறுவடை செய்ய நேரிடும்.

“இனம்புரியாத ஒரு உணர்வுபூர்வமான பந்தத்துடன் நெஞ்சத்தில் வசிக்கும் எம் நேசமிகு தலைவர் ரஜினியின் நற்பண்புகளைக் கூட சிதைத்து சித்தரிக்கும் வஞ்சக திமுகவிற்கு இனி என் வாழ்நாளில் வாக்களிக்கமாட்டேன்” என்று நான் உறுதிமொழி ஏற்றிருக்கிறேன். இன்னும் பலர் இதே உறுதிமொழியை எடுத்திருக்கக்கூடும். அப்படி இதுவரை செய்யாத ரஜினி அபிமானிகளை இந்த உறுதிமொழியை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மொத்தத்தில், இந்த பதிவு
- என் சக “ரஜினி அபிமானி”களுக்கு சுற்றறிக்கை.
- திமுகவிற்கு எச்சரிக்கை.
ஜனநாயக ரீதியில் நாங்கள் (ரஜினி அபிமானிகள்) யாரென்று காட்டுவோம். திமுகவின் பகை முடிப்போம்.
BHARATH Kumar
Making Rajini as the Chief minister is the next biggest goal for Rajini fans and all good citizens.
N IYAPPAN
ரஜினி இஸ் one man army
T.veerasamy
நல்லவர்களை வரவேற்போம்
V.SATHIYANARAYANAN
Rajini sir kitta yarum nerungamudiyathu avar aanmiga arasiyal saiya vararu rajini ennum oru manthara sollulu nan 35 varuda pakthan nan rajini rasigar mandarathil ellai mattrum rajini sir yai nera pakkalamna athu ku oru kudupina venum
Aanmigam endral netriyil pattai pottukondu koil koila poravanga ella rajini sir oru yuga purushar avar varumpothu nama annaivarum oru rajini rasigar kuraithathu 100 vottavavathu mattrum valamai namidam erunthal michatha thalaivar pathupar.
Kalignar ayya nanbar amma therivilaya namba sir ethai vida veru enna venum
Athanai lakshnathai petravar hindu,Muslim,christian enna yaraga erunthalum rajini sir ANBU KU ADIMAI
KADAVUL ERUKAN
M.MURUGAN.
நல்லதொரு தரமான தெளிவான தீர்க்கமான கருத்து.மனதார வரவேற்கிறேன்.பாராட்டுக்கள்.தொடர்பில்.M
Sundar srinivasan
Criticizing hindu epics and even the Thamizh books which have been written centuries ago has been made a laughing stuff.. criticizing only Hindu gods or goddesses is not secularism or atheism. ????! All people following their own beliefs in peaceful manner is better than vote bank atheism!????.
Tamil people destroy Tamil and say they are real Tamils..
Mohamed Salman
He should come to politics. We are expecting clean politics in TN
Suresh
We stand with தலைவர்
Gopi
திமுக வும் வேண்டாம் இந்த ரஜினியும் வேண்டாம்?
Sundar
In the other states, howmany tamilian became CM?
Will they allow?
K Saravanan
அவரின் அரசியல் பார்வைகள் வருங்கால தமிழகத்திற்கு தேவையான , வரவேற்கத்தக்க ஒன்று..
தலைவரின் வருகையை எதிர்நோக்கும் மக்களில் ஒருவன்..
K SRIDHAR
He is south India Modijee
Ravi. J
I am very ordinry person Can you explain the good things done to TN people He is good actor. NO DOUBT for TNcelebrate asSuperStarr ok well please write reasons whydo we vote him since he is not Tamilian Before getting angry pleasethink and say the name of the state which elected as their C M from outsider of state
முருகேசன்
அரசியல் என்பது ஒரு வாழ்வியல், திரைத்துறை போலி ஆளுமைகள், எம்மை ஆள நினைப்பதும், அதற்கு துணை போவதும், அறம் அல்ல. அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விசம்…இது தமிழ் தேசியம் மண்….
சுரேஷ்குமார். C
நானும் இதை ஆதரிக்கிறேன்…
MURALI
He will come and conquer for the asking
செந்தில்
அருமையான பதிவு??? முடிவோடு இருக்கிறேன் தலைவரை மட்டுமே பின்தொடர்வதென்று….???
செந்தில்
நம்மை ஆள்வதற்கு நல்ல உள்ளம் கொண்ட மனிதன் தான் தேவை…. என்ன இனம், மொழி என்பது தேவையில்லை!!!! குறுகிய வட்டத்தை முதலில் வெளியே வாருங்கள்….
Ganesan
We are always Rajinikanth side…????
Kumar n villupuram
Rajani come
Seethapathi
Wellhumen beings he is great
SATISH
ரஜினியை தனிப்பட்ட முறையில் யாரும் எதிர்க்கவில்லை அவர் பாஜகவின் ஆதரவு நிலையினாலே இயற்கையாகவே எதிர்ப்பு அதிகரிக்கிறது. திமுக ஆட்சி அமைப்பது உறுதி…
Mukundan
Spiritual politics
Clean politics
Wait and watch Thalaivaaaaaaar rage ??
Swaminathan
S Rajini is the one to teach DMK a lesson. DMK is a bunch on of idiotic leader and his chumchas. Their stalin cannot write his own name properly nor talk tamil properly. We the people has started to geel that v need change from dravidam parties.Rajini block buster soon.Talaiva vas nee yaaru unga power enna,unnga kadavul ungala kaivida mattar.Ragavendra,Jesus nd Allah ella kadavullum unga pakkam.makkal nallane unga ennam.
Swaminathan
Ennda stalin nd others including media Rajini peru vandadhan onga news paper sales illa onga magazine sales agum. Rajini pera sonnala odaringa.Evar enna pannaporaru enna sollaporaru.eppadi irruka neenga avara pathi pesa thupailla.uncivilised rotten rats
Shanthi
Good one.. Appreciate the efforts in listing down clear details.. Looking forward for the change in Tamilnadu
Swaminathan
Rajini sir Hindi,Telugu,Kannadam, Malayalam,Bengal,Orissa,Assam nd chinala jackichan nd Dhoni evanga ellorium just hello nu sonna podum attam kalaktidum. Evanukkum varada support makkal nd artist kittirundum varum da.Dhoni nd 3 khans podum.Tamil nadu rajini win panna. Kassu kettka mattanga ellorum avarodu anbu, affection iku odi vandruvanga. Tamilnadu la vera evannukum eth illa.Ambani vettu marriage iku ethana tami artist political leaders iku invitation koduthangs. Thalival vera level Ella mada kadavaloda chella pIllai.
antony j
முட்டாள் அடிமுட்டாள்
சினிமாவில் உள்ள நடிப்பை நிஜ வாழ்க்கையில் காணமுடியுமா
நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டேகளா
S.Palaniappan
RAJINI FOR CHANGE ?
Baskaran
Dmk mattum avara thittala admk ,seman ellorum thaan.
J. SEENIVAS
இவர்களை வலுவாக எதிர்க்க ஏற்கனவே எங்களுக்கு ஒரு காரணம் இருந்தது.
அது இந்து மத துவேஷம்.
இப்போது இது ஒன்று.