திமுக, அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை பார்த்திருப்பீர்கள். சலுகைகள் நிரம்பி வழிகின்றன. அவற்றை பார்த்ததும் மனதில் ஓடிய எண்ணம் இங்கே –
திமுகவும், அதிமுகவும் தங்கள் சாதனை என்று மார்தட்டும் ஒரு முன்னேற்றம் என்ன தெரியுமா? தமிழ்நாட்டின் 49% உயர்கல்வி சேர்க்கை (49% Higher Education GER). அதாவது, 18-23 வயது உள்ளவர்களில் +2 தாண்டி படிப்பவர்கள் விகிதம் 49%. இந்திய அளவிலேயே பெரிய மாநிலங்களில் முதல் இடம்.
இதன் அர்த்தம் என்ன? தமிழ்நாடு நிறைய உயர்கல்வி படித்தவர்கள் உள்ள மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தில் இலவச கலாச்சாரத்தையும் மாய வாக்குறுதிகளையும் கொடுத்து ஜெயிக்கமுடியும் என்கிற நம்பிக்கை இந்த இரு கட்சிகளுக்கும் இருக்கிறதென்றால், நாம் எப்படிப்பட்ட “படித்த முட்டாள்”களாக இருக்கவேண்டும்?!
நாமெல்லாம் IPLல் யார் ஜெயிப்பார் என்பது போலத்தான் இந்த தேர்தலை அணுகுகிறோம். ஆம், “தோனியா” “ரோஹித்தா” “கோலியா” என்பது போல் “எடப்பாடி பின்னி பெடல் எடுக்கிறார்”, “ஸ்டாலின் சுழட்டி அடிக்கிறார்” என புல்லரித்து புளகாங்கிதம் அடைகிறோம்.
நம் தலையின் மீதும் நமது அடுத்த தலைமுறையின் மீதும் வைக்கப்படும் கொள்ளிக்கட்டையை “ஐஸ்கட்டி” என்று நினைத்து நாம் சிலாகிக்கும் வரை, எடப்பாடிகளும் ஸ்டாலின்களும் பேரரசர்களாக வாழ்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.