இரண்டு நாட்களுக்கு முன் நண்பருடன் நிகழ்ந்த ஒரு உரையாடல். அவர் கேள்விகளும், என் பதில்களும் இங்கே –
நண்பர்: எப்படி இன்னமும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி வருவார்ன்னு நம்புறீங்க?
நான்: அது குருட்டு நம்பிக்கையா இருக்கலாம், இல்லை ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடா இருக்கலாம். ஐ.சி.யூல வென்டிலேட்டர் சப்போர்ட்ல நோயாளி இருக்கும்போது, டாக்டரே “இனி பிழைக்கிறது கஷ்டம்”ன்னு சொன்ன பின்னாலும் நெஞ்சில் ஒரு ஓரத்துல “ஏதாவது ஒரு அதிசயம் நடந்து உயிர் பிழைக்காதா”ன்னு ஒரு நம்பிக்கையோட கடவுளை வேண்டுவோம்ல, அந்த மாதிரி நம்பிக்கைதான். சில சமயங்களில் அந்த நம்பிக்கைகள் பலிச்சு உயிர் பிழைச்ச சம்பவங்களும் நடந்திருக்கே.
நண்பர்: சரி, நீங்க நினைக்கிற மாதிரி கடைசி நேரத்துல ரஜினி வர்றாருன்னே வச்சுக்குவோம். அவரால மக்கள்கிட்டே தன் திட்டங்களை முழுமையா எடுத்திட்டு போக முடியுமா?
நான்: துல்லியமா பிரச்சார திட்டம் போட்டு செயல்படுத்தினா முடியும். அவர்கிட்டே “ரஜினி மக்கள் மன்றம்”னு கட்டமைப்பு இருக்கு, அவருக்காக அமெரிக்காவிலிருந்து கூட லீவு போட்டுட்டு வந்து வேலை செய்ய ஆள் இருக்கு. “இதை இதை இவங்க செய்யணும், இதெல்லாம் பேசணும், இதெல்லாம் பேசக்கூடாது”ன்னு தெளிவான ஆயத்தங்களை செஞ்சிட்டு களம் இறங்கினால் போதும். தமிழ்நாட்டு பகுதிகளை சில மண்டலங்களா பிரிச்சு, ஒரு மண்டலத்துக்கு ஒரு பொதுக்கூட்டம்ன்னு ரஜினி பேசினால் மொத்த தமிழ்நாட்டையும் கவர் பண்ணிடலாம். ஒவ்வொரு கூட்டமும் 2010ல ஜெயலலிதா நடத்துன மாதிரி மாஸ் கூட்டமா இருக்கணும், இருக்கும்.
நண்பர்: மக்கள் ஏத்துக்குவாங்களா?
நான்: இப்போ திமுகவும் அதிமுகவும் என்ன சிறப்பான திட்டங்களை முன்வச்சிருக்காங்கன்னு சொல்லுங்க? வெட்ட போற கிடாவுக்கு மாலை மரியாதை பண்ற மாதிரிதான் அவங்க மக்களை “கவனிக்கி”றாங்க. இந்த நேரத்துல ரஜினி வந்து “சிஸ்டம் கெட்டு போயிருக்கு, வாங்க மாத்தலாம்”ன்னு போன மார்ச் மாசம் சொன்ன மாதிரி அருமையான தொலைநோக்கு திட்டங்களை முன்வச்சா மக்கள் நிச்சயம் யோசிப்பாங்க, பரிசீலனை செய்வாங்க.
நண்பர்: சரி, அதெல்லாம் ஓட்டா மாறுமா? ரஜினி கட்சி ஜெயிக்கும்னு சொல்ல முடியுமா?
நான்: ஜெயிக்கிறது, தோக்குறதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் திமுக, அதை விட்டா அதிமுகன்னு மாட்டிகிட்டு முழிக்கிற தமிழ்நாட்டுக்கு ஒரு வலுவான மாற்று கட்சி/கூட்டணியை முன்வைக்கணும். அதை ரஜினி செஞ்சிட்டா போதும். அதையும் மீறி ரஜினி கட்சி தோத்துச்சுன்னா அது மக்களே எழுதிக்கிற தலைவிதிதான். ஏற்கனவே ரஜினி சொன்ன மாதிரிதான் – ஜெயிச்சா மக்களோட வெற்றி, தோத்தா மக்களோட தோல்வி.
நண்பர்: ரஜினி முதல்வர் வேட்பாளரா வருவாரா?
நான்: வாய்ப்பு ரொம்ப குறைவு. அவர் சொன்ன மாதிரி ஒரு திறமையான இளைஞரை முன்னிறுத்தவே வாய்ப்பு அதிகம். எடப்பாடியோ, ஸ்டாலினோ ஆகச்சிறந்த ஆளுமைகள் இல்லை. அதனால ஒரு இளைஞரை அவங்களோட மோதவிடுறதுல தப்பில்லை. அது போக, ரஜினி முதல்வர் வேட்பாளரோ இல்லையோ, மக்களை பொறுத்தவரை அது ரஜினி கட்சிதான், ரஜினி ஆட்சிதான். மக்கள் முழுக்க முழுக்க ரஜினியை நம்பிதான் ஓட்டு போடுவாங்க.
நண்பர்: இதெல்லாம் சரி, குறைஞ்ச கால அவகாசம்தானே இருக்கு. கடுமையான உழைப்பு தேவைப்படுமே?
நான்: கிரிக்கெட்ல கடைசி அஞ்சு ஓவர்ல அறுபது ரன் அடிக்கிற மாதிரி சூழ்நிலைதான். சவால்தான். ஆனா இந்த மாதிரி சவால் சூழ்நிலைகள்தான் முழு ஆற்றலை வெளிக்கொண்டுவரும். அந்த வகையில், ரஜினி + அவர் அபிமானிகள் + மாற்றம் விரும்பும் தமிழ்நாட்டு மக்கள் – இவங்களோட முழு ஆற்றலும் வெளிப்பட வேண்டிய நேரம். நல்லது நடக்கணும்னா இதை செஞ்சுதான் ஆகணும்.
நண்பர்: இப்படியெல்லாம் நம்பிக்கை வச்சிருக்கற உன்னை பைத்தியக்காரன்னு சொல்ல மாட்டாங்களா?
நான்: தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கணும்னு இப்படி ஒரு நம்பிக்கை வச்சிருக்கேன். அது பைத்தியக்காரத்தனம்னா, இன்னும் கொஞ்ச வாரங்களுக்கு பைத்தியக்காரனாவே இருந்துட்டு போறேனே.
Vijayaraman
Verygood
KK
Very good. Send to Thalivar
Srinivasan
Super