காவிரி நீர் பங்கீடு

Home ரஜினி வாய்ஸ் 2.0 பிரச்சினைகள் காவிரி நீர் பங்கீடு

காவிரி நீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து… (பிப்ரவரி 16, 2018 – ட்விட்டர் பதிவு)

காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் நிகழ்ந்த சமயம் (மார்ச் 29, 2018 – ட்விட்டர் பதிவு)

“காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். I sincerely hope justice will prevail.


காவிரி & ஸ்டெர்லைட் – நடிகர் சங்க போராட்டம் நடந்த சமயம்  (ஏப்ரல் 7, 2018 – சென்னையில் பேட்டி)

“காவிரி மேலாண்மை பற்றி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் “காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்க  வேண்டும்” என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள்.  அதற்கு மத்திய அரசை திட்டம் தீட்ட சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசாங்கம், கர்நாடகா ஒத்துக்கொள்ளவில்லை. கேரளா மறுப்பு தெரிவிக்கிறது. திட்டங்களை காரணம் சொல்லி காலத்தை வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்.

நான் மத்திய அரசுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான் – அனைத்து தமிழக மக்களின் நியாயமான கோரிக்கை “காவிரி மேலாண்மை வாரியம்”. அனைத்து தமிழக மக்களின் ஒரே குரல், வலுவான குரல் “காவிரி மேலாண்மை வாரியம்”. இது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அமைக்காவிட்டால் அனைத்து தமிழக மக்களின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும். அதை அவர்கள் (மத்திய அரசு) தெரிந்து கொள்ளவேண்டும். 

காணொளி: https://youtu.be/mWufp-lOW8o (மணித்துளி 0:11 முதல் 1:11 வரை)


கர்நாடகத்தில் புதிய அரசு உருவாகிய சமயம் (மே 20, 2018 – சென்னையில் பேட்டி)

நிருபர்: கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார்கள். இந்நிலையில் காவிரி விவகாரத்திற்கு எப்படிப்பட்ட தீர்வு கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
ரஜினி: உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பை நிறைவேற்றியே ஆகவேண்டும். அது அவர்களது (கர்நாடக அரசின்) கடமை.

நிருபர்: கடந்த காலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நிறைவேற்றப்படவில்லையே? இந்த (காவிரி மேலாண்மை) ஆணையம் முழுமையான உரிமைகள் கொண்ட அமைப்பாக இல்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ரஜினி: அணைகளின் கட்டுப்பாடு அந்த ஆணையத்திடம் இருக்க வேண்டும். அந்த கட்டுப்பாடு கர்நாடகாவிடம் இருப்பது நல்ல செய்தி அல்ல. ஆணையத்திடமே கட்டுப்பாடு இருப்பது நல்லது என்பது என் தாழ்மையான கருத்து.

நிருபர்: மேலாண்மை வாரியம் வராமல் ஆணையம் வரவேண்டிய அவசியம் என்ன?
ரஜினி: ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு நாம் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், ஆணையத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள். அவ்வகையில் அரசின் தலையீடு இருக்கும். (ஆணையத்தின் செயல்பாடுகளை) போகப் போக பார்க்கலாம்.

காணொளி: https://youtu.be/LMLTc9YdHnQ (மணித்துளி 2:59 முதல் 3:49 வரை)


 

error: Content Copyrights Reserved !!