மாற்று அரசியல்

படிப்பறிவு வீதத்தை பகுத்தறிவோம்

 

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் நரேன் அந்த பேக்கரிக்குள் நுழைந்தான். சிறிய கடைதான், ஆனால் “காபி டே” போன்ற அமைப்பு. வாடிக்கையாளர்களை கவனிக்க 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் மட்டுமே இருந்தார். கடையில் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களே இருந்தனர்.

நரேன் கேக், காபி ஆர்டர் செய்தான். அந்த பெரியவர், காபி போட்டுக்கொண்டே பேச்சு கொடுக்க துவங்கினார் – “என்ன தம்பி, வரப்போற தேர்தலில் யாருக்கு வோட்டு போடுறதுன்னு முடிவு பண்ணிட்டியா?”. நரேன் “இன்னும் இல்லைங்க. யோசிக்கணும். இல்லேன்னா இருக்கவே இருக்கு நோட்டா” என்றான்.

பெரியவர், “தம்பி, இன்னைக்கு உங்களை மாதிரி புள்ளைங்கல்லாம் நல்லா படிக்க முடியுதுன்னா அதுக்கு காரணம் கலைஞரோட திமுக ஆட்சிதான். தமிழ்நாட்டுல 2011 சென்சஸ்படி படிப்பறிவு வீதம் (Literacy Rate) 80% இருக்கு. 1970களில் கலைஞர் கல்விக்காக நிறைய செஞ்சார். அப்புறம் வந்த அதிமுகவும் தொடர்ந்து செஞ்சது. திரும்ப கலைஞர் ஆட்சிக்கு வந்தப்பவும் நிறைய கல்லூரிகள் வந்துச்சு. அதனாலதான் இன்னைக்கு 80%ன்னு இருக்கறோம். எல்லா முன்னேற்றத்துக்கும் அடிப்படை கல்விதானே. அதனால உதயசூரியனுக்கு வோட்டு போடுப்பா” என்றபடியே கேக்கும் காபியும் கொடுத்தார். அவற்றை எடுத்துக்கொண்ட நரேன், “அட, வித்தியாசமா திமுகவுக்கு வோட்டு கேட்கிறாரே” என்று நினைத்தபடி ஒரு டேபிளில் அமர்ந்தான்.

அப்பொழுது “பிரதர், உங்ககூட உட்கார்ந்து காபி சாப்பிடலாமா” என்று கேட்டபடியே ஒருவர் நரேனுக்கு எதிரில் அமர்ந்தார். பார்க்க “செக்க சிவந்த வானம்” படத்தில் வரும் விஜய் சேதுபதி போல இருந்தார். “ஐ யாம் கார்வேந்தன்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். நரேனும் தன் பெயரை சொன்னான்.

கார்வேந்தன், “பெரியவர் பேச்சு கேட்டு சூரியனுக்கு வோட்டு போடுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா பிரதர்?” என்று கேட்டார். அதற்கு நரேன் “அப்படியெல்லாம் இல்லை ப்ரோ. ஏன் நீங்க அதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம்னு எதுக்காவது வோட்டு கேட்கப்போறீங்களா?” என்றான், சிரித்துக்கொண்டே.

“நானெல்லாம் இந்த சின்னம்தான்னு எதையும் பிக்ஸ் பண்ணி வச்சுருக்கிறதில்ல, பிரதர். அந்தந்த தேர்தல், அப்போதைய சூழ்நிலை பார்த்து முடிவு பண்ணி வோட்டு போடுவேன். நீங்க எப்படி?”

“நானும் கிட்டத்தட்ட அப்படிதான் ப்ரோ. இப்போதைக்கு இந்த பெரியவர் சொன்ன கலைஞர்-திமுக ஆட்சி-கல்வி வளர்ச்சிதான் மைண்ட்ல ஓடிட்ருக்கு”.

“பிரதர், நான் சில விஷயங்கள் சொல்றேன். அதை வச்சு நீங்க யோசிங்க” என்று கார்வேந்தன் பேச தொடங்கினார். “2011 சென்சஸ்படி மக்கள்தொகை அதிகம் உள்ள முதல் 10 மாநிலங்களை எடுத்துக்கிட்டா தமிழ்நாடு 7வது இடத்துல இருக்கு. இந்த 10 மாநிலங்களில், 80.1% படிப்பறிவு வீதம் கொண்ட தமிழ்நாடு இரண்டாவது இடத்துல இருக்கு. அதுக்கு மேல 82.3% கொண்ட மகாராஷ்டிரா இருக்கு”.

“சூப்பர் ப்ரோ. நல்ல விஷயம்தானே. முதல் இடத்துல கேரளான்னு சொல்லுவாங்களே..” என்றான் நரேன்.

“ஒட்டுமொத்தமா பார்த்தா கேரளாதான் 94% படிப்பறிவு வீதத்தோட இந்தியாவின் நம்பர் 1 நிலையில இருக்கு. ஆனா, கேரளாவோட மக்கள் தொகை தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட பாதிதான். இதனாலதான் நான் மக்கள்தொகை அதிகம் உள்ள முதல் 10 மாநிலங்களை பத்தி மட்டும் பேசுறேன். அந்த 10 மாநிலங்களில் 2வது இடத்தில் தமிழ்நாடு இருக்கறது நல்ல விஷயம்தான். ஆனா..” என்று கார்வேந்தன் லேசாக இழுத்தார்.

கேக்கை மென்றுகொண்டிருந்த நரேன் கார்வேந்தனை உற்று பார்த்தான். அவர் தொடர்ந்தார் – “1971ல் தமிழ்நாட்டுல படிப்பறிவு வீதம் என்ன தெரியுமா? 45.4%. அப்பவும் மகாராஷ்டிராதான் நம்மளை விட ஒருபடி மேல 45.77% வச்சிருந்தது. மத்த 8 மாநிலங்களின் படிப்பறிவு வீதம் 40%க்கும் கீழேதான். அதுலயும் மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், பீகார்ன்னு 5 மாநிலங்களில் 30%க்கும் கீழே”.

இப்படி சொன்ன கார்வேந்தன் சடாரென டாபிக் மாறி “நரேன் பிரதர், நீங்க கிரிக்கெட் பார்ப்பீங்களா”? என்றார். “ம்ம்.. ரொம்பவே. கோலி, தோனி ரொம்ப பிடிக்கும்” என்றான் நரேன். உடனே கார்வேந்தன், “ஒருநாள் கிரிக்கெட் போட்டில, முதலில் ஆடுற இந்தியா டீம் 30 ஓவரில் ஒண்ணுரெண்டு விக்கெட் விட்டு 190 அடிச்சிருக்குன்னு வச்சுக்குவோம். 50 ஓவர் முடிவுல என்ன ஸ்கோர் அடிக்கும்னு எதிர்பார்ப்பீங்க?” என்று கேட்டார். சற்றும் யோசிக்காமல், நரேன் “360லேர்ந்து 400க்குள்ள ஒரு ஸ்கோர்” என்றான்.

“கடைசில இந்தியா 50 ஓவரில் 320தான் அடிக்குது. என்ன சொல்லுவீங்க?”.

“நல்ல ஸ்கோர்தான். ஆனா ஆரம்பிச்ச வேகத்துக்கு, இது ஆஹா ஓஹோன்னு சொல்லிக்கிற மாதிரி ஸ்கோர் இல்லைன்னு சொல்லுவேன்”.

சிரித்த கார்வேந்தன், “அதேதான். தமிழ்நாட்டோட படிப்பறிவு வீதம் 1971ல 45.4%ல இருந்துட்டு, 2011ல 80.1% ன்னு இருக்கிறதும் இப்படி ஆஹா ஓஹோன்னு சொல்லிக்க முடியாத விஷயம்தான்“. தொடர்ந்தார் – “அதாவது, தமிழ்நாட்டின் படிப்பறிவு வீதம் 1971 – 2011க்கு இடைப்பட்ட 40 ஆண்டு காலத்தில் 1.76 மடங்கு உயர்ந்திருக்கு. இதே காலகட்டத்தில், ராஜஸ்தான் கிட்டத்தட்ட 3 மடங்கு, உத்தரபிரதேசம் 2.82 மடங்கு, ஆந்திரா 2.73 மடங்குன்னு படிப்பறிவு வீதத்தை உயர்த்திருக்காங்க. இதுல உத்தரபிரதேசம், ஆந்திரா மக்கள்தொகையில் நம்மைவிட அதிகம்.” என்றார்.

பாதி காபி குடித்திருந்த நரேன் “யோசிக்க வேண்டிய விஷயம்தான்” என்றான். கார்வேந்தன், “1971க்கு முன்னாடி பெரும்பாலான வருஷங்கள் காங்கிரஸ்தான் தமிழ்நாட்டில் ஆட்சியில இருந்தது. இந்த பெரியவர் திராவிட ஆட்சிகள் காரணம்னு சொல்றாரே, நான் சொன்ன மத்த மாநிலங்களில் ஆட்சி செய்த கட்சிகள் திராவிட கட்சிகள் இல்லை. மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, பாரதிய ஜனதா ஆட்சி செஞ்சிருக்காங்க. ராஜஸ்தானில் காங்கிரஸ், ஜனதா, பாரதிய ஜனதா; உத்தரப்பிரதேசத்துல காங்கிரஸ், ஜனதா, ஜனதா தளம், பாரதிய ஜனதா, சமாஜவாதி, பகுஜன் சமாஜ்ன்னு பல கட்சிகள் ஆண்டிருக்காங்க”.

நரேன் கேட்டான் – “ப்ரோ, இந்த பெரியவர் திமுக-அதிமுக ஆட்சியால நிறைய காலேஜ்லாம் வந்ததா சொன்னாரே?”. அதற்கு கார்வேந்தன், “மேடை பேச்சுல புள்ளி விவரங்கள் கேட்கும்போது வர்ற மயக்க நிலை இது. கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கைன்னு எடுத்துக்கிட்டா தமிழ்நாட்டை விட மக்கள் தொகை குறைஞ்ச ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்களில் ஸ்கூல், காலேஜ் எண்ணிக்கை அதிகம்”.

கார்வேந்தன், “இன்னொரு இன்டெரெஸ்ட்டிங் விஷயம் சொல்லட்டுமா? ‘மாணவர்-ஆசிரியர்’ விகிதம்னு (Pupil-Teacher Ratio) ஒண்ணு இருக்கு. அதாவது, ‘இத்தனை மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்’ என்கிற கணக்கு. இது கம்மியா இருக்கறது ஆரோக்கியமான விஷயம். ஆசிரியர்கள் மாணவர்களிடம் அதிக கவனம் செலுத்த முடியும். அந்த வகையில, தமிழ்நாட்டோட மாணவர்-ஆசிரியர் விகிதம் சிறப்பா இருக்கு. படிப்பறிவு வீதத்துல நமக்கு ஒருபடி மேல இருக்கற மகாராஷ்டிராவை விட நம்மளோட மாணவர்-ஆசிரியர் விகிதம் நல்ல நிலையில இருக்கு. சின்ன உதாரணம் சொல்றேன். 2015-16 நிலவரப்படி, உயர்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாட்டுல 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். அதே காலகட்டத்தில, மஹாராஷ்டிராவில் 44 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்”.

கார்வேந்தன் சொல்லி முடிக்கும்பொழுது, நரேன் காபி குடித்து முடித்துவிட்டான். அவரிடம், “நீங்க பார்க்கதான் விஜய் சேதுபதி மாதிரி இருக்கீங்க. ஆனா, சினிமால விஜயகாந்த் புள்ளிவிவரம் பேசுற மாதிரி பேசுறீங்க” என்றான். அதற்கு அவர், “பிரதர், இன்னைக்கு இளைஞர்கள் வாட்ஸப் பார்வேர்ட், பேஸ்புக் போஸ்ட்ன்னு எல்லாத்தையும் நம்புறாங்க. எனக்கு அவங்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு தரணும்னு ஆசை. அதான் இப்படி நானா வந்து உங்ககிட்ட பேசினேன். நான் சொன்னதை கொஞ்சம் ஆழமா யோசிங்க. யோசிச்சிட்டு என்ன தோணுச்சுன்னு எனக்கு வாட்ஸப் பண்ணுங்க” என்று தன் மொபைல் நம்பரை நரேனிடம் பகிர்ந்து கொண்டார். இருவரும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.

மறுநாள் காலை கார்வேந்தனின் வாட்ஸப்பில் நரேனின் மெஸேஜ் –
“ப்ரோ, நல்லா யோசிச்சுட்டேன். மூணு விஷயம் பளிச்ன்னு தோணுச்சு.

 1. பொதுவா, 1971 – 2011 காலகட்டத்துல இந்தியா முழுக்கவே கட்சி பேதமில்லாம அவங்கவங்க ஆட்சியில கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. அதனால தமிழ்நாட்டுல மட்டும் “ஊரு உலகத்துல இல்லாததை செஞ்சுட்டாங்க”ன்னு ஓவரா கொண்டாடிட முடியாது.“முதுகுல தட்டி கொடுக்கலாம், மார்தட்டிக்க முடியாது”ங்கற மாதிரியான வளர்ச்சி.
 2. தமிழ்நாட்டில் மாணவர்- ஆசிரியர் விகிதம் (Pupil-Teacher Ratio) சிறப்பாக இருந்தும், அது படிப்பறிவு வீதத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்தப்படல.  அதனால தொட வேண்டிய உச்சத்தை தொடல.
 3. 1971 – 2011 காலகட்டத்துல 1.76 மடங்கு படிப்பறிவு வீதத்தை முன்னேற்றிய தமிழ்நாடு, மக்கள்தொகையில் தன்னைவிட அதிகம் இருக்கும் மேற்கு வங்காளத்தைப்போல் முனைப்பை (1.96 மடங்கு உயர்வு) காட்டியிருந்தால், படிப்பறிவு வீதத்தை (Literacy Rate) 90% கொண்டு போயிருக்கலாம். நீங்கள் சொன்ன கிரிக்கெட் உதாரணம் நல்லாவே பொருந்துது.

நன்றி. நம் நட்பு தொடரும்”.


Data Sources:

 • https://censusindia.gov.in/2011census/PCA/PCA_Highlights/pca_highlights_file/India/Chapter-3.pdf
 • https://m.rbi.org.in/Scripts/PublicationsView.aspx?id=18127
 • “Educational Statistics At A Glance – 2018” document by Department of School Education & Literacy, Statistics Division (Ministry of HRD)
 • Planning Commission website –  http://planningcommission.nic.in/data/datatable/data_2312/DatabookDec2014%20224.pdf

இ-மெயிலில் புதிய பதிவுகள்/கட்டுரைகள் பற்றிய குறிப்புகளைப் பெற –

4 comments
 1. Vinoth

  Maharashtra Rajasthan la Elllam central rulling party power la irrundaanga…

  Enga oru state party centrluku againsta evalavu senchirkaanga bro…

  This comparison not at all correct.

  India 70 yearsla evalavu fund andhra statukkum tamil nadukkum centre allot panniirrumnu detail share panna mediums

  How the centre govt treated south state government on that time cau u aware..

  Leave….

  Can u compare income tax contribution from tamil nadu with other north side states..
  We r contributing more and getting less…
  Comparision is ur poor understanding.. without knowing the history….

  1. tn20admin

   Bro –
   1971-75: Central govt’s ruling party Congress was alliance partner of TN’s ruling DMK
   1977-79: TN’s ruling ADMK was in very cordial relations with the Centre’s ruling Janata
   1984-87: Central govt’s ruling party Congress was alliance partner of TN’s ruling ADMK
   1989-90: TN’s ruling DMK was an alliance partner of Centre’s ruling National Front (led by VP Singh)
   1991-96: Central govt’s ruling party Congress was alliance partner of TN’s ruling ADMK
   1996-98: TN had representation in Union Cabinet in both non-Congress and BJP governments
   1999-2014: DMK had Cabinet ministers in 3 successive Central governments

   Even after all these, if you still say that Maharashtra, Rajasthan achieved such literacy rate improvements due to Central ruling party’s support, I find it as an excuse for our under-performance.

   In terms of financial contributions, all wealthy states contribute higher. Most of the southern states are wealthy states (not just TN).

 2. Vinothpillai

  As I told ,why regional parties were formed several southern states because central govt that time only concentrated on north side states.

  Famous phrase Vadukku Vazhkiradu therku Theikiradu

  Because of election alliance , centrl govt have alloted more funds …. our Tamil nadu govt has be dissolved three times by central

  Ok.. The growth in Maharashtara is combined efforts of state and central govt. Lots of foreign investments taken at that time by central

  And it is a huge population state, we should have appreciate the efforts put by both the governments..

  But note , one time Amarthiya Sen.. Nobel prize winner has expressed about the growth of tamil nadu..

  If u want to compare the social growth of tamil nadu, then u have to compare with foreign developed countries not to other Indian states..

  Hope we have to grow more but it does not mean we r in worst condition..

  However, somebody getting 82% is a success and some one getting 80.23 % how can u tell is failure ?

  Thxnk for ur valuable reply

  Vinothpillai

  1. tn20admin

   Bro – I didn’t glorify Maharashtra’s growth as success and also didn’t say that TN is in worst condition. Regarding TN, I have mentioned “முதுகுல தட்டி கொடுக்கலாம், மார்தட்டிக்க முடியாது”ங்கற மாதிரியான வளர்ச்சி (and not as failure). My whole point is – TN has significant human resources, talent and a great potential. But, these Dravidian party rulers have NOT DONE ENOUGH to channelize them to the maximum possible extent (the Cricket score example in the above article will provide better clarity).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content Copyrights Reserved !!